இந்தியா

2 மணிநேரம் 12 கிமீ தூரம்: கொலையாளியை கண்டுபிடித்த மோப்ப நாய் துங்கா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

கர்நாடகாவில் துப்பறியும் நாய் ஒன்று, 2 மணி நேரத்தில் கொலை நடந்த இடத்தில் இருந்து 12 கி.மீ தூரம் மோப்பம் பிடித்து சென்று கொலையாளியை தேடிப்பிடித்துள்ளது. 

கடந்த ஜூலை 10ம் தேதி, கர்நாடகா மாநிலம் டேவனகேரே (Davanagere)ல் சூல்கேரே (Soolekere) அருகே உள்ள காஷிப்பூர் தண்டா (Kashipur Tanda) பகுதியில் வசிக்கும் சேத்தன் மற்றும் சந்திர நாயக் உள்ளிட்ட நண்பர்கள், தார்வாட் (Dharwad) மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஒரு துப்பாக்கியை திருடிச் சென்றனர். இந்த கொள்ளையில் தனக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என சேத்தனிடம் சந்திர நாயக் கோரியுள்ளான். இல்லையெனில் போலீசாரிடம் காட்டிக்கொடுத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதனால், தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திர நாயக்கை கொலை செய்ய சேத்தன் திட்டமிட்டுள்ளான்.

இதனையடுத்து பங்கு பிரித்து தருவதாக கூறி, நாயக்கை சூல்கேரே அருகே உள்ள தொட்டிலு (Thottilu) என்னும் பகுதிக்கு சேத்தன் வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து சுட்டு கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இந்த கொலை சம்பந்தமாக விசாரணையை தொடங்கிய போலீசார், கர்நாடக போலீஸ் படையில் இடம்பெற்றுள்ள துப்பறியும் நாயான துங்காவை வரவழைத்தனர். KM.பிரகாஷ் என்ற தலைமை காவலர் தூங்காவுடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

ALSO READ  ஊடரக்கில் மக்களை வீட்டுக்குள்ளேயே வைக்க BCCI புது ஐடியா....

இரவு 9:30 மணிக்கு தேடுதல் வேட்டையை தொடங்கினர் சரியாக 12:30 முப்பது மணி அளவில் துங்கா சம்பவ இடத்தை நன்றாக மோப்பம் பிடித்தது, இது கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. ஓடியது. முதலில் மதுபானக்கடை பின்னர் உணவு விடுதி இறுதியாக காஷிப்பூர் தண்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே நின்றது.

அது சந்திர நாயக்கின் உறவினர் வீடாகும். அதன் அருகே சேத்தன் போனில் யாரிடமோ பிஸியாக பேசிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசார், கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை மற்றும் கொலை குற்றத்தை சேத்தன் ஒப்புக்கொண்டான். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்து குற்றவாளியை தேடிப்பிடித்த துங்கா நாய்க்கு பாராட்டுகள் குவிகின்றன.

ALSO READ  குடிசைப்பகுதியில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு.

இதுகுறித்து தலைமை காவலர் பிரகாஷ் கூறுகையில்:-

எனது 15 வருட சர்வீஸில் பல திறமையான மோப்ப நாய்களை கையாண்டும் நேம் ஆனால் அனைத்து மோப்ப நாய்களை விடவும் துங்கா மிகவும் சிறந்ததாக விளங்குகிறது குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த நாயக்கின் தொப்பியை முதலில் மோப்பம் பிடித்த துங்கா கிட்டத்தட்ட 12 கிலோ மீட்டர் தூரம் ஓடி கொலையாளியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன்னர் அரசிகெரே (Arasikere) தாலுகாவில் மோப்பநாய் ஒன்று 8 கிலோமீட்டர் தூரம் ஓடி குற்றவாளியைக் கண்டுபிடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதை துங்கா முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

துங்கா மோப்பநாய்:-

பிறந்த குட்டியாக கர்நாடகா போலிஸ் படையில் சேர்க்கப்பட்ட துங்கா ஒன்பது ஆண்டுகளில் 30 கொலைகள் உள்ளிட்ட 60 வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவி புரிந்துள்ளது. இவற்றுள் 25 திருட்டுச் சம்பவங்களும், 5 கூட்டுக்கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களும் அடங்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது…… சக்திகாந்த தாஸ்….

naveen santhakumar

ஜிப்மர் மருத்துவமனையில் சிறுநீரகக் கற்களை உடைக்கும் அதிநவீன கருவி:

naveen santhakumar

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க சீரம் நிறுவனம் திட்டம் …!

naveen santhakumar