இந்தியா

எளிமையாக நடந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் – இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தேசியத் தலைவர் (DYIF) பி.ஏ. முகமது ரியாஸ் திருமணம் இன்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ. தேசியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸுக்கும்  இன்று 10:30 மணி அளவில் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், கொரோனா தொற்றுப் பரவல் தடுப்ப வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.

ALSO READ  பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

பாதுகாப்புக் காரணங்களுக்காக மிகக் குறைவான உறவினர்களே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். முகமது ரியாஸ் வழக்கறிஞராக உள்ளார். வீணா விஜயன் பெங்களூருவில் Exalogic Solutions Pvt Ltd  என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

ALSO READ  "ஏ.ராஜா ஆகிய நான்" தமிழ் மொழியில் பதவியேற்றுக்கொண்ட கேரள எம்.எல்.ஏ ..!

முகமது ரியாஸ் 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசின் எம்.கே.ராகவனிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதர் மற்றும் கே.எம்.அய்ஷாபி ஆகியோரின் மகனாவார். 



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் கங்குலி அனுமதி..!

News Editor

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

naveen santhakumar

கொரோனா தடுப்பூசி – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்கள் பங்கு முக்கியமானது சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பாராட்டு

News Editor