இந்தியா

‘சிங்கம்’ பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரி- ஐஜி நடவடிக்கை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


தமோ:-

மத்திய பிரதேசத்தில் பணியில் இருந்தபோது ‘சிங்கம்’ பட பாணியில் 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்த போலீஸ் அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள நரசிங்கார் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மனோஜ் யாதவ்.

இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சிங்கம் பட காட்சியால் ஈர்க்கப்பட்ட மனோஜ், தன்னையும் ஒரு ஹீரோவாக நினைத்து கொண்டு, காவலர் சீருடையுடன் பணியில் இருந்தபோது 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தும் உள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின. மேலதிகாரிகளின் கவனத்திற்கும் இந்த வீடியோ பதிவு சென்றது. 

ALSO READ  நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்... பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ஒதுக்கீடு..

இதுபற்றி விசாரணை மேற்கொள்ள தமோ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹேமந்த் சௌகானுக்கு சாகர் சரக (Sagar Range) ஐ.ஜி. அனில் ஷர்மா உத்தரவிட்டார். 

Left IG Anil Sharma.

இவை இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டியாக அமைந்து விடும் என கூறி மனோஜுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч

Shobika

2021ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

Admin

தனது சொத்தை பிரதமர் மோடிக்கு கொடுக்க விரும்பும் மூதாட்டி:

naveen santhakumar