இந்தியா

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு… பிரதமர் மோடியின் ஏழு முக்கிய வேண்டுகோள்கள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


புதுடெல்லி:-

பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தமிழ்நாடு அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 20 வரை ஊரடங்கு உத்தரவு மிகக்கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் ஏப்ரல் 20 க்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் நாளை வெளியிடப்படும் எனவும் கூறியிருந்தார்.

ALSO READ  ரேசன் கடையில் சமையல் சிலிண்டர் - மத்திய அரசின் திட்டம்!

இதனிடையே பிரதமர் மோடி 7 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார்:-

1) முதியோர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

2) வீட்டில் கூட முக கவசங்களை கட்டாயம் அணியுங்கள். வீட்டில் செய்த முக கவசங்களை கூட அணியலாம்.

3) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் 

4) மே 3 வரை தற்போது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்

ALSO READ  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

5) உங்களை சுற்றி இருக்கும் ஏழை மக்களை கவனித்துக் கொள்ளுங்கள் 

6) இந்த கடினமான சூழ்நிலையில் மக்களுக்கு சேவை செய்வோருக்கு மரியாதை அளியுங்கள்

7) யாரையும் வேலையை விட்டு நீக்கிகாதீர்கள்

ஊரடங்கு விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஒரு லட்சம் படுக்கைகளுடன் கூடிய 600 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Прогнозы И Ставки На Спорт Сегодня От Команды Профессионалов На Спорт-экспрес

Shobika

1xbet 보너스 사용법 알아보기 메인 계정과 보너스 계정의 차이 코리아벳

Shobika

‘நான்தான் நிஷா ஜிண்டால்’… பெண் பெயரில் போலி கணக்கு… பதினோரு வருடங்களாக அரியர் எழுதிவரும் இன்ஜினியரிங் பட்டதாரியின் தில்லாலங்கடி….

naveen santhakumar