இந்தியா

ரேசன் கடையில் சமையல் சிலிண்டர் – மத்திய அரசின் திட்டம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிறிய சமையல் எரிவாயு உருளைகளை ரேஷன் கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஆக்கபூர்வமாக திட்டமிட்டுள்ளது.

union govt decided to sell gas cylinder in ration shops

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயை கடந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விற்பனையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.

ALSO READ  மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 1000 ரூபாய் அபராதம்.....

இது தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சுதான்ஷூ பாண்டே,

நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நியாய விலைக்கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, நியாய விலைக்கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை மூலதனப் பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நியாய விலைக்கடைகள் மூலம் நிதிச் சேவைகளை வழங்கும் திட்டத்தைப் பாராட்டிய நிதி சேவைகள் துறையின் பிரதிநிதி, நியாய விலைக்கடை டீலர்களுக்கு முத்ரா கடன்களை மூலதனப் பெருக்கத்திற்காக நீட்டித்து, தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

ALSO READ  இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் :

இந்த கூட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள்-யூனியன் பிரதேச அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாத்தான்குளம் சிறை மரணம்: ஹர்பஜன் சிங் கண்டனம்… 

naveen santhakumar

அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஹோலி கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது…..

naveen santhakumar

நம்பர் பிளேட் இல்லாததல் சொகுசு காருக்கு ரூ. 27.68 லட்சம் அபராதம்

News Editor