இந்தியா

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?? நாளை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் நரேந்திர மோடி நாளை (திங்கட்கிழமை)  மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் கலந்துரையாடுகிறார். ஏற்கெனவே 4 முறை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி உள்ளார்.

ஊரடங்கு முடிய ஒருவாரமே உள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் கலந்துரையாட உள்ளார். நாளை பிற்பகல் 3 மணிக்குக் கலந்துரையாடுகிறார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி:-

ALSO READ  கேரளாவில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்..

அப்போது கொரோனா அதிகமாகப் பரவியுள்ள இடங்கள், பரவலுக்கான காரணம், அதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றியும், போதிய அளவில் சோதனைக் கருவிகள், மருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும் பிரதமர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிக்க வேண்டியுள்ளதா என்றும், ஊரடங்கைத் தளர்த்தினால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யத் தமிழகத்துக்கு 12ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கவும், வரி வருவாயில் தமிழகத்துக்கான பங்கை வழங்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

ALSO READ  "Online Casino Games Play Now In Addition To Win Bi

முன்னதாக அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா (Rajiv Gauba) மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் இ-சஞ்சீவினி தளம் :

naveen santhakumar

MostBet Somalia login va ro’yxatdan o’tish, onlayn tikish uchun promo-kod, mobil ilova

Shobika

நவம்பர்-7 முதல் பட்டாசு வெடிக்க தடையா?????

naveen santhakumar