இந்தியா

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு; புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலியல் வழக்குகளில் சர்ச்சை கூறிய தீர்ப்பிற்கு பெயர்போன நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்திய முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், ‘உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்’ எனக் கூறி குற்றவாளிக்கும் தண்டனையையும் குறைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

ALSO READ  டிரம்ப் உணவு உண்ண தயாராகும் தங்க-வெள்ளி பாத்திரங்கள்…

இது அவருக்கு புதிதல்ல இப்படி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் நீதிபதி புஷ்பா.  உச்சநீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என  தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்தப் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா இல்லாத மாநிலமானது கோவா..!!!

naveen santhakumar

சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் – டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

News Editor

பிரபல ஆன்லைன் கல்வி பயிலும் தளத்தின் 22 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடபட்டு விற்பனை..

naveen santhakumar