இந்தியா

கொரோனா இல்லாத மாநிலமானது கோவா..!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பானாஜி:-

கோவா இந்தியாவில் கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாகியுள்ளது.
கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாகக் குணமடைந்ததால் கொரோனா இல்லாத மாநிலமாக ஆகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி கோவா மாநிலத்தில் மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ALSO READ  உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்... எந்த நாடு தெரியுமா???

இவர்களில் 6 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். ஏழாவது நபருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

கோவாவை கொரோனா இல்லாத மாநிலமாகக் ஆக்குவதற்குத் தம்முடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் ஆகியோருக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர்.

ALSO READ  தமிழகத்தில் தனியார் ரயில்கள்; வழித்தடங்கள்- முக்கிய அறிவிப்பு….!

இதேபோல முதல்வர் பிரமோத் சாவந்த்,  தலைமைச் செயலாளர் பரிமல் ராய், சுகாதார துறை செயலாளர் நீலா மோகனன் ஆகியோரும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Pramod Sawant.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

”வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணம்”- அதிகாரிகளை வியக்கவைத்த நூதன கடத்தல்

naveen santhakumar

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் – நிதியமைச்சர் விளக்கம் …!

naveen santhakumar

‘உனக்கு என்ன ஒரு தைரியம்’ புலியின் மீது துள்ளி விளையாடும் தவளைகள்… 

naveen santhakumar