இந்தியா

பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?… மோடி விளக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்தாண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்களின் திருமண வயது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் படி பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் குவிந்து வந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 என உயர்த்தியது ஏன் என்ற காரணத்தை முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME) மூலமாக புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப மையம் மற்றும் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசிய போது பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

“மகன்களும், மகள்களும் சமம் என நாங்கள் நம்புகிறோம். பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 என உயர்த்துவதன் மூலமாக பாரத தேசத்தின் மகள்கள் தங்களின் கெரியரை அவர்களே அமைத்துக் கொள்ள முடியும். அதன் மூலம் அவர்கள் சுய சார்பாகவும் இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது:

naveen santhakumar

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

naveen santhakumar

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin