இந்தியா

விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் கொடூரம் தமிழகத்தில் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னயை சேர்ந்த “வழக்கறிஞர் சூரியபிரகாசம்” என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், நேரடி சூதாட்டத்திற்கு தடையுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாகவும், பொழுதுபோக்குக்காக செல்லும் இளைஞர்கள் பின்னர் அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீடு- டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

இதில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என   தெரிவித்திருந்தார்

ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

ALSO READ  முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் - அதிகாரபூர்வமாக அறிவித்தது இந்திய விமானப்படை

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயவுசெய்து ஆக்சிஜன் கொடுத்து உதவுங்கள்; அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் !

News Editor

மேலும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை …!

naveen santhakumar

குறையும் கொரோனா; மன ஆறுதல் பெரும் மருத்துவர்கள் !

News Editor