இந்தியா

தயவுசெய்து ஆக்சிஜன் கொடுத்து உதவுங்கள்; அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .

ALSO READ  கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய அஜித் !


இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால்  மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.குறிப்பாக டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இதுவரை 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் ஆக்சிஜன், டேங்கர்கள் இருந்தால் தந்து உதவுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரத்தில் உள்ள ஆக்சிஜன் நெருக்கடியை போக்க உதவுமாறு முன்னணி தலைவர்களுக்கு கடிதம் அவர் எழுதியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அந்தமான் – நிகோபாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…!

naveen santhakumar

6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!

naveen santhakumar

தன்னை கலாய்த்த பெண்ணுக்கு தக்க பதிலடி கொடுத்த சோனு சூட்:

naveen santhakumar