இந்தியா

அசாம் வெள்ளத்தில் ஆட்டு கொட்டகையில் தங்கிய புலி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கௌஹாத்தி:-

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா அருகே புலி ஒன்று வெள்ளம் காரணமாக ஆட்டுக் கொட்டகையின் தங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அசாம் மாநிலம் காசிரங்கா அருகே அக்ரடோலி சரகத்திற்கு உட்பட்ட (Agratoli Range) கண்டோலிமரி (Kandolimari) கிராமத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புலி ஒன்று ஆட்டுக் கொட்டகையில் புலி ஒன்று தஞ்சம் புகுந்தது.

ALSO READ  குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டு காங்கிரஸ் MLA-க்கள் ராஜினாமா…

கடும் வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில்  430 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 27 மாநிலங்களில் 21 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக காசிரங்கா தேசிய பூங்காவில் இயக்குனர் P.சிவக்குமார் கூறுகையில்:-

ALSO READ  பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாது - சீரம் நிறுவனம்?

பூங்காவில் உள்ள வன விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உண்டான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு பெரும்பாலான விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  வெள்ளத்தில் சிக்கிய கை கழுவுவதற்கு மேற்பட்ட விலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரையில் மான்கள் கரடி உள்ளிட்ட 47 விலங்குகள் இறந்துள்ளனர். இவற்றில் 9 விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளன, 11 விலங்குகள் வாகனங்கள் மோதி இறந்துள்ளன, 14 விலங்குகள் சிகிச்சையின்போது இறந்துள்ளன என்றார்.

சமீபத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 118 புலிகள் அங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

100 மணி நேர போரட்டத்திற்கு பின் சிறுவன் மீட்பு!

Shanthi

Mostbet Kz Официальный Сайт: Казино И Букмекерская Контор

Shobika

இந்தியாவில் வேகமாக பரவும் : புதியவகை கொரோனா – ஐசிஎம்ஆர் தகவல்

naveen santhakumar