இந்தியா

அமைச்சர் கமலா ராணி கொரோனா தொற்றால் உயிரிழப்பு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

னலக்னோ:-

உத்தரபிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக (Technical Education Minister) பணியாற்றியவர் கமலா ராணி வருண் (62).

ALSO READ  டெலிகிராமில் சேனல் தொடங்கிய ராகுல் காந்தி… 

கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் (Sanjay Gandhi Postgraduate Medical Science Institute) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கமலா ராணி உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,700 ஆக உள்ளது. தலைநகர் லக்னோ, கான்பூர், மீரட் உள்ளிட்ட நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ALSO READ  டெல்லி ஐஐடி உருவாக்கிய கொரோனா PCR கருவிக்கு -ICMR அனுமதி....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா மகன்…

naveen santhakumar

டெல்லியை கைப்பற்ற போவது யார்…சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

Admin

அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 43 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor