இந்தியா

பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மறைவு .!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேசிய விருது வென்ற பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

National Film Awards: Wheelchair-Bound Surekha Sikri Says, 'It Makes Me So  Happy'

1978 ஆம் ஆண்டு கிஸ்ஸா குர்சி கா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சுரேகா சிக்ரி. இந்த படத்தை தொடர்ந்து தமாஸ் (1988), மம்மோ (1995) மற்றும் பாதாய் ஹோ (2018) ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

‘பாலிகா வது’ என்ற இந்தி தொடர் மூலம் இவர் பிரபலமானவர். அந்தத் தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்பானது.

ALSO READ  தேசிய கீதம் அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்

சோயா அக்தர் இயக்கிய நெட்ஃபிக்ஸ்ஸில் வெளியான ஆந்தாலஜி தொடரான கோஸ்ட் ஸ்டோரிஸில் சுரேகா கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanın ən yaxşı bukmeker kontor

Shobika

இன்று முதல் விவசாயிகளுக்கான கிஸான் ரயில் துவக்கம்… 

naveen santhakumar

எளிமையாக நடந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்… 

naveen santhakumar