இந்தியா

பெரும் எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ள “மத்திய பட்ஜெட் 2020” இன்று தாக்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 2021ம் ஆண்டுக்கான 6-6.5 சதவிகித அளவிற்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மனித கழிவுகளை அள்ளும் பணியாளர்களின் மரணத்திற்கு இனி அரசே பொறுப்பு...!

இந்நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுவது குறித்த பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வீழ்ச்சியை சந்தித்துள்ள முக்கிய தொழில் துறைகளை மீட்டெடுக்கும் வகையில் அறிவிப்பு வெளியாவது குறித்தும், புதிய ரெயில்கள், புதிய வழித்தடங்கள், நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியோடு அமைச்சர்களை உளவு பார்த்தாரா மோடி?

News Editor

“MeToo” பதிவில் தனது பெயரை மாணவி ஒருவர் பகிர்ந்தால் 14 வயது மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

naveen santhakumar

சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

News Editor