லைஃப் ஸ்டைல்

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பீட்ரூட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள்.பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் B, C உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது.

Newest > beetroot juice for face | Sale OFF - 52%
  1. ஒளிரும் சருமத்திற்கு: பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. அந்த வகையில் பீட்ரூட்டை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை ஒளிர வைக்கலாம். ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை முகம் முழுவதும் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மிளிர தொடங்கிவிடும்.
  2. சரும பிரகாசத்திற்கு: வைட்டமின் C, முகத்தில் பிரகாசத்தை பெற்றுத்தரும் மாயாஜால ஊட்டச்சத்து முகவராக அறியப்படுகிறது. பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை ஒன்றாக பயன்படுத்தும்போது சருமத்தில் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவும். சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்க துணைபுரியும்.
ALSO READ  முகத்திலுள்ள அழுக்குகளை நீக்க எளிய குறிப்புகள் :
2 Simple Ways To Prepare Beetroot Face Packs At Home

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்

உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோலை பொடித்து தயாரித்த தூள் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: அகன்ற கிண்ணத்தில் ஆரஞ்சு தூளை கொட்டி அதில் பீட்ரூட் சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பசை போல் குழைத்த பிறகு அந்த பேஸ்டை முகத்தில் தடவிவிட்டு உலர விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பிரகாசிக்கும்.

ALSO READ  விளக்கெண்ணெயின் வியக்கவைக்கும் பலன்கள் :
Beetroot Face Packs For Dry Skin, Pimples, and Skin Whitening - 365 gorgeous
  1. முகப்பருவுக்கு: பீட்ரூட்-தயிர் இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் புள்ளி புள்ளிகளாக படர்ந்திருக்கும் துளைகளை நீக்க உதவும். முகப்பருவையும் போக்கும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள்ஸ்பூன்

தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், பீட்ரூட் இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும். அதனை முகம் முழுவதும் தடவி விட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Hair tattoo பற்றி தெரியுமா?

Admin

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் உள்ள ஆபத்துகள் :

naveen santhakumar

உடல் பருமனை குறைக்க உன்னதமான வழிகள் :

Shobika