லைஃப் ஸ்டைல்

மனசு பேசுகிறது : தாயும் தாரமும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமான இருவர் என்றால் அது தாயும், தாரமும் தான். ஏனெனில் வீட்டை கோவிலாக மாற்றுபவள் தாய் என்றால், அந்த கோவிலில் விபக்கேற்றி வைப்பவன் தாரம்.

பள்ளி காலத்தில் மாநில ஹாக்கி வீரரான பிலிப் வினோத் ராஜ், பின்னர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு. ஏழு ஆண்டுகள் குவாலிட்டி இன்ஜினியராக பணியாற்றினார்.

அடிப்படையியல் மெக்கானிக்கல் இன்ஜினியரான பிலிப் வினோத்ராஜுக்கு கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம். பிலிப் வினோத் ராஜ் தாயும் தாரமும் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையினை காணலாம்

தாயும் தாரமும்!!!

தாயவள் செய்த அறுவடை -நான்
காணாத உலகம் என்னை கண்டெடுக்க வழிசெய்தாள் !

குட்டி பிண்டம் எனைச் சுமத்து கட்டிதங்கமென பொத்தி பொத்தி வார்த்து,
காடு மேடு திரிந்து வயல் மேடென கூலி பல கண்டு மேதைப்போல்,
எனை செய்ய கடும் பாதைகள் பல கடந்தாள் !

அவள் காய்த்துப்போன கைகள் ஊட்டும் சோற்றிலும் வீசும் தாய்ப்பால் வாசம் !

ALSO READ  சிறுத்தைக்குட்டிகள் கூட வாடகைத்தாய் மூலம் பிறக்குமா?


பத்துத்திங்கள் எனைச் சுமந்து வலியோடு என்னைப்பிழிந்து பசிமறக்க பால்செய்ய,

குருதிக்கொண்டு வேதியியல் வினை செய்தாள் !பருகி நான் சிரிக்க பசிமறந்தாள் மங்கையவள் !

வயல் விழுந்தெனக்கு வானம் தேடினாள்,
வரப்பு புள் அறுத்து , கூலி களையெடுத்து பட்டம் கொடுத்தாள் எனக்கு !

தூக்கம் துறந்தென்னை துயில் செய்தாள் !

ஆசையில்லா அதிசயமவள் , கோடி நான் கண்டாலும் தரைத்தூங்கும் தங்கமவள் !
வாழைமர இழைப்பாசம் கடல் கடந்தெனக்கு வீசும் !
வானுயர நான் போக தூக்கிவிட துடித்திருப்பாள் !!

நான் ருசித்த வெற்றியில் அவன் பங்கு நூறு !
இயந்திரமாய் சுழன்றென்னை இயந்திரவியலாளனாய் செய்தாள் என் அம்மா !!
தாரமாய் என் விரல் இடை நீக்க அவள் விரல் வருடி ,வான் சென்று விண்மீண்க்கொண்டு மோதிரம் கோர்த்து என் வாசம் செய்தேன் அவளை !!

இடைவெளி கொடுமை அயல்நாட்டு வாழ்வென அவள் நிஜ விரல் தொட கனவில் முத்தமிடுகிறேன் !

ALSO READ  புளிச்ச கீரை தொக்கு

துளிர் செய்த வினை வயிற்றுக்குள் சிறு உயிர் !!

அவள் செல்லச் சிறையில் என் தங்கமகன் ,
அவன் உதைத்த சத்தம் கேட்க கயவன் நான் ,
உடல் பெருத்த என் கயல்மகள் வயிர்த்தடவி நடைப்பயணம் செய்யாப் பாவி நான் ,
சில்லறை தேடிய பயணத்தில் என்னவளின் வலிகளை சுமக்கா கள்வன் நான் ,

எனைச் சுமந்த தாயவளின் வலியறிந்தும் , எனை சுமக்கா தாயவளின் வலியுணரா பாவி நான்,

எண்ணம் முழுக்க அவளிருந்தும் செல்போன் முத்தங்கள் சிரிக்கிறது,
மனம் முழுக்க ஏக்கம் ஏனோ வரிந்துக்கட்டிக்கொண்டு சண்டையிட
பணம் தேடிய நான் ஏக்கம் கொள்ள தகுதி ஏனோ ?!!

பால் மனம் வீசும் அவன் முத்தத்தில் கரைந்தொழுகி தோற்பேனோ ,
என் நெஞ்சேறி வான் பறக்க அவன் ரெக்கை கேட்டால் என்செய்வேன் !!!
நானும் தவிக்கிறேன் ரெக்கைகள் இன்றி ,
என்று விடியுமோ இந்த இரவு !!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளர்ந்த மார்பகங்களை சரி செய்வது எப்படி?

News Editor

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் உள்ள ஆபத்துகள் :

naveen santhakumar

சிறு வயதில் வறுமை.. படிப்பு ஒன்றே பிரதானம்..டிஜிட்டல் துறையில் சாதித்த தரணீதரன்

News Editor