லைஃப் ஸ்டைல்

புளிச்ச கீரை தொக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேவையான பொருட்கள்:

புளிச்ச கீரை-1 கட்டு
பூண்டு-10 பல்
ம.தூள்-சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
பெருங்காயத்தூள்-சிறிதளவு
கடுகு- 1ஸ்பூன்
வெந்தயம்-1/2 ஸ்பூன்
மிளகு-1 ஸ்பூன்
சீரகம் -1ஸ்பூன்
கொத்தமல்லி விதை-1 ஸ்பூன்
வரமிளகாய்- 10 எண்ணிக்கை
ப.மிளகாய் -7 எண்ணிக்கை
கருவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:

வெந்தயம், மிளகு, சீரகம் ,மல்லி விதை, 6 வரமிளகாய் இவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து  மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.

புளிச்ச கீரையை நன்கு  ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி  நீரில்லாமல் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

பச்சை மிளகாயை காம்பை கிள்ளி விட்டு மிக்ஸியில் போட்டு  சிறிது உப்புடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

ALSO READ  தழும்புகளை தவிடுபொடியாக்கும் தரமான வைத்தியம்.....

பூண்டை நன்கு தோல் உரித்து ஒன்றிரண்டாக வெட்டி வைக்கவும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து  அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெயை ஊற்றி கடுகை போடவும்.

கடுகு பொரிந்ததும் மீதமுள்ள 4 வரமிளகாயை கிள்ளி போடவும்.

அடுத்து கருவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் அலசி வைத்த புளிச்ச கீரையை அதில் போட்டு  கலந்து  நன்றாக வதக்கவும்.

நன்றாக வதங்கியதும்  அதில் மிக்ஸியில் பொடித்து வைத்துள்ள பொடியையும்,
பெருங்காயத்தூளையும் போடவேண்டும்.

ALSO READ  கழுத்தின் கருமையை போக்க பயனுள்ள குறிப்புகள் :

தேவையான அளவு உப்பும் போட்டு மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சுருங்கி நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

மிகவும் சுவையான சத்தான  புளிச்ச கீரை தொக்கு தயார்.  நன்றாக ஆறியதும் ஒரு உலர்ந்த கண்ணாடி பாட்டிலில்  போட்டு பிரிட்ஜில் வைத்து விடவும்.

ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

சூடான சாதத்தில் இதை  தேவையான அளவு கலந்து ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக  வெட்டி  அப்படியே பச்சையாக  மேலே தூவி பரிமாறவும்.

எஸ்.ராஜலெஷ்மி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அழகு சாதன பொருட்களை பாதுகாக்கும் வழிமுறைகள் :

Shobika

பர்ஃபெக்டான ஜீன்ஸ் அணிவது குறித்து சில டிப்ஸ் உங்களுக்காக…!!!

Shobika

சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 3 (நவரத்தினங்களுள் ஒன்று )

News Editor