லைஃப் ஸ்டைல்

நீங்க மஷ்ரூம் பிரியரா : வாங்க சுவையான மஷ்ரூம் சாப்பிடலாம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Related image

காளான் – மருத்துவ பயன்கள்

  • காளான் இரத்தத்தில் கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 
  • உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
  • இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.
  • 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
  • காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும் .
  • மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
  • மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
ALSO READ  முகத்தில் எண்ணெய் வழிகிறதா…???வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்…!
’மஷ்ரூம் பெப்பர் ஃபிரை’ நாவூறூம் சுவையில் சமைக்க டிப்ஸ்..!

காளான் ஃபிரை தேவையான பொருட்கள் :

  • காளான் – 400 கிராம்
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • பட்டை , ஏலக்காய் – 1
  • வெங்காயம் – 3
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 1
  • குடை மிளகாய் – 1/2
  • உப்பு – 1 ஸ்பூன்
  • சீரகப் பொடி – 1 ஸ்பூன்
  • மிளகுப் பொடி – 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை : காளானை ஸ்லைஸ் போல் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளிகளையும் அவ்வாறே நறுக்கவும்.

Image result for காளான் ஃபிரை

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை ஏலக்காய் போட்டு வதக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வரும்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி மசிந்ததும் குடைமிளகாயை போட்டு வதக்கவும். பின் உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு வதங்கியவுடன் காளானை சேர்த்து பிரட்ட வேண்டும்.

ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். தண்ணீர் சுண்டி தொக்கு போல் இருக்கும்.

ALSO READ  வீடியோ கேம்ஸ் குழந்தைகளுக்கு நல்லது : 70% பெற்றோர்கள்!
Image result for மஷ்ரூம் பெப்பர் ஃபிரை

அதன் மேல் தற்போது பெப்பர் தூவி 2 நிமிடங்கள் பிரட்டிய பின் கருவேப்பிலை தூவி இறக்கிவிடுங்கள். சுவையான மஷ்ரூம் பெப்பர் ஃபிரை தயார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Admin

பெண்களை….இனிமே கிரீன் டீ குடிக்க மட்டும் பயன்படுத்தாம இதுக்கும் பயன்படுத்துங்க…..

naveen santhakumar

விரல்களில் வித்தையை காட்டும் விதவிதமான மோதிரங்கள் :

Shobika