மருத்துவம்

கிரீன் டீ யால் உங்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகிறதா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிரீன் டீ யால் உங்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகிறதா?

இன்றைய காலக்கட்டத்தில் மனிதனின் அனுதினமும் தன் எதிர்காலம் குறித்த திட்டமிடலோடு மிகத்தீவிரமாக உழைக்கின்றான். எதிர்காலம் என்பது அவனின் பணம், கனவு ஆகியவற்றை தாண்டி தன் உடல் நலத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்கின்றோம். இன்று நாம் ‘கிரீன் டீ’யில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என தெரிந்துகொள்வோம். மற்ற தேயிலைகளை ஒப்பிடும் போது கிரீன் டீ பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நேரங்களில் கிரீன் டீ தேயிலையினால் ஒவ்வாமை ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கிரீன் டீ உட்கொண்ட சிறிது நேரத்திலேயே நீங்கள் உங்கள் தலையில் கனத்தையோ அல்லது தலைச்சுற்றலையோ உணர்ந்தால் உடனடியாகமருத்துவ உதவியை நாட வேண்டும். இதற்கு காரணம் காஃபின் வேதிப்பொருள் இருப்பதேயாகும்.

ALSO READ  சீரகத்தின் சிறப்பான பயன்கள்:

க்ரீன் டீ சாப்பிடுவதால் பொதுவாக சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பின் இது மலச்சிக்கலாக மாறும். கிரீன் டீ என்பது இரைப்பை அமிலத்தின் தூண்டுதலாகும். இது வயிற்றில் எரியும் உணர்வு, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் மற்றும் செரிமானத்திற்கு இடையூறு விளைவிக்கிறது.

உணவுக்குப் பிறகு கிரீன் டீ உட்கொள்வது ஒரு பொதுவான நடைமுறையாக உள்ளது. அவ்வாறு செய்வது நல்லது என்று தோன்றினாலும், அது நம் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். மேலும் கிரீன் டீயில் டானின்கள் இருப்பதால் இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டாலும், உபயோகமில்லை.

ALSO READ  கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கிரீன் டீ சிலருக்கு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். கிரீன் டீ குடித்த உடனடியாக தோல்வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஹைபர்சென்சிட்டிவ் சருமம் இருந்தால் அது நிகழ அதிக வாய்ப்புள்ளது.

இந்த மாதிரி பின்விளைவுக்கான அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் கிரீன் டீ குடிப்பதை குறைப்பது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய 77 வேதியல் பொருட்களை கண்டறிந்தது சூப்பர் கம்ப்யூட்டர்…..

naveen santhakumar

தூக்கத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறதா? அது என்ன நோய் தெரியுமா? 

naveen santhakumar