அரசியல்

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ALSO READ  அமெரிக்காவில் தலைமை நீதிபதியான திருநெல்வேலிக்காரர்…

அந்த வகையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பாஜகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  அதில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர் இழுப்பறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இரு கட்சிகளுக்கிடையே உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்டுள்ள நிலையில் தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!

Admin

இனிமே தான் இருக்கு முக்குலத்தோர் புலிப்படையோட ஆட்டம்-கருணாஸ்:

naveen santhakumar

ஒரு ஓட்டுக்கு 5 லட்சம் கேளுங்கள், கமல்காசன் பரப்புரை…

News Editor