அரசியல்

முன்னாள் எம்.பி. கொரோனாவுக்கு பலி… சோகத்தில் மூழ்கிய காங்கிரஸ்!

Corona virus
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனா தொற்றால் இன்று மரணமடைந்த சம்பவம் அக்கட்சியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996ம் ஆண்டு தமிழ் மாநில கட்சி சார்பிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 1998ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார் . அதன்பிறகு ராம்பாபு தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share
ALSO READ  தற்போதைய நிலவரம்; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு !

News Editor

திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டது ; ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு !

News Editor

கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிவிட்ட அமைச்சர்……யார் அந்த அமைச்சர்?????

naveen santhakumar