அரசியல் இந்தியா தமிழகம்

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பெறுவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள 30 கோடி பேருக்கும் மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.200 மானியம் கிடைக்க போவது கிடையாது.அதற்கு மாற்றாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே ரூ.200 மானியம் கிடைக்கும் தகுதி உடையவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வரும் சுமார் 1.20 கோடி பேருக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்பட உள்ளது என்றும் இந்த மானியத் தொகையானது வங்கியில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ  ஊரடங்கு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்த தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கைது. ...

இதனையடுத்து மற்ற 21 கோடி பேருக்கு வருடத்திற்கு 12 சிலிண்டர் மட்டுமே மானியமாக வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கு அதிகமாக வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடைக்காது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மானியத்தை நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!

News Editor

முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !

News Editor

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 16 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar