தமிழகம்

உலக சுற்றுலா தினம்: கீழடி அகழாய்வு தளத்தில் குவிந்த மக்கள் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கீழடி அகழாய்வு தளத்தில் குழிகளை பார்க்க நேற்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பபட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அவர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

2_2609chn_84_2

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம் சார்பில் கீழடியில் சிறப்பு கண்காட்சி மற்றும் தமிழர்களின் சிறப்பு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள்...இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றது!!
image

இன்று(திங்கட்கிழமை ) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் கீழடி, கொந்தகையில் அகழாய்வு குழிகளை பார்வையாளர்கள் பார்க்க சிறப்பு அனுமதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட கலைபொருட்களும் , பழமை வாய்ந்த இசைக்கருவிகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழமையான இசைக்கருவிகளை இசைப் பள்ளி ஆசிரியர் ஆண்ட்ரூஸ் பொதுமக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்.

ALSO READ  இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
image

இந்த சிறப்பு கண்காட்சியை காண மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்த கண்காட்சிகளை பார்த்துச் செல்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; பிரதமருக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் !

News Editor

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி:

naveen santhakumar

காஞ்சிபுரத்தில் தேர்தல் அதிகாரி திடீர் உயிரிழப்பு – தேர்தல் நிறுத்தி வைப்பு..!

naveen santhakumar