விளையாட்டு

4 நாடுகளில் ‘சூப்பர் சீரிஸ்’ ஒருநாள் தொடர்- கங்குலியின் அடுத்த பிளான்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச அளவில் 4 நாடுகளில் ஆண்டுதோறும் சூப்பர் சீரிஸ் ஒருநாள் போட்டி தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டமிட்டுள்ளார்.

இந்த தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐசிசி தரவரிசையில் இடம் பெற்ற சிறந்த நாடு ஆகியவற்றில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் முதல் தொடர் 2021ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறுவதாகவும், ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடக்கும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே ஐசிசியில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையால் அயர்லாந்து அணி தொடர் முழுவதையும் ரத்து செய்ததையும், டெஸ்ட் போட்டி டி20 போட்டி ஆக மாற்றப்பட்ட தும் சமீபத்தில் நடந்தது. அதேசமயம் இந்த தொடர் சீரிஸ் திட்டத்திற்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் சேர்மன் எர்ல் ஹெடிங்ஸ், இதுபோன்ற கடினமான நேரங்களில் தொடர்ந்து விளையாடுவது இயலாத காரியம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐசிசி எதிர்கால கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை கடினமாக இருப்பதாக வீரர்கள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் வந்த நிலையில் தற்போது இந்த தொடர் சீரிஸ் மீண்டும் புகைத்தலை கிளப்பியுள்ளது. மேலும் இப்படியே டாப் ரேங்கிங்கில் இருக்கும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டே இருந்தால் கிரிக்கெட்டின் எதிர்காலம் அவ்வளவுதான் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share
ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று 2வது ஒருநாள் போட்டி:ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகும் இந்திய அணி

Admin

சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு கொரோனா இல்லை :

naveen santhakumar

இனி 4 நாட்கள் மட்டுமே டெஸ்ட் போட்டி: ஐசிசியின் புதிய திட்டம்

Admin