விளையாட்டு

மல்யுத்தம்- அரையிறுதிக்கு பஜ்ரங் புனியா முன்னேற்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

32ஆவது ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபார வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Olympics Live: कुश्ती में आज दो और पदकों की आस, बजरंग और सीमा बिस्ला  लगाएंगे दांव - tokyo olympics 2020 wrestler bajrang punia seema bisla match  wrestling live updates tspo - AajTak

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாஸர் அக்மாட்டாலிவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 2-1 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் படும்படி அழுத்திப்பிடித்தார். இதனால் Victory by Fall முறையில் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ  ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க வீரர்.! 

இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்-ஐ எதிர்கொள்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 நாடுகளில் ‘சூப்பர் சீரிஸ்’ ஒருநாள் தொடர்- கங்குலியின் அடுத்த பிளான்

Admin

சூப்பர் ஓவரில் வெற்றி… தொடரை கைப்பற்றிய இந்தியா

Admin

டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி

Admin