விளையாட்டு

பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: வங்கதேசத்தின் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இனி விளையாட போவதில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அங்கு செல்ல எந்த அணியும் விரும்புவதில்லை. இதனால் பாகிஸ்தான் அணி வெளிநாடுகளிலும், பொதுவான வெளியிடங்களிலும் மற்ற நாடுகளுடன் போட்டிகளில் பங்கேற்று வந்தது. இதற்கிடையில் பத்தாண்டுகள் கழித்து இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. இதனால் மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி, பாதுகாப்பு காரணங்களுக்காகவே பாகிஸ்தான் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதேசமயம் டி20 போட்டிகளில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.வேண்டுமென்றால் டெஸ்ட் போட்டியில் வேறு ஏதாவது நாடுகளில் நடத்தினால் வங்கதேசம் அணி பங்கேற்கும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : காயம் காரணமாக வெளியேறினார் ஹர்திக் பாண்டியா

Admin

தோனியை இப்படி எல்லாம் பாத்துருக்கமாட்டிங்க. எப்படி இருந்திருக்காரு பாருங்க

News Editor

3 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்ற செரீனா வில்லியம்ஸ்

Admin