விளையாட்டு

ஆட்டம் டை ஆனால் இதுதான் நிலைமை…ஐசிசி புது முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டி20 போட்டிகள் சமனில் முடிந்தால் பின்பற்றப்படும் சூப்பர் ஓவரில் என்னென்ன விதிமுறைகள் இருக்கும் என்பதை ஐசிசி அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்கி பல போட்டிகளில் பின்பற்ற சூப்பர் ஓவர்களால் ஐசிசி கடும் விமர்சனத்திற்குள்ளானது என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது.

இந்நிலையில் டி20 போட்டிகளின் சூப்பர் ஓவரில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. அதில் போட்டி ‘டை’யில் ஆனால் சூப்பர் ஓவர் விளையாடப்பட்டு தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் விளையாடப்படும் எனவும், இரண்டு விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  5 ஆண்டுகளுக்கு பின் ஜி.வி.பிரகாஷூக்கு அடித்த அதிர்ஷ்டம்

மேலும் ஒவ்வொரு அணிக்கும் தலா ஒரு ‘ரிவியூ’ வாய்ப்பு வழங்கப்படுமென்றும்,சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

போட்டியில் 2-வது பேட்டிங் செய்த அணி சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங்கும்,முதலில் பீல்டிங் செய்யும் அணியே பந்தை தேர்வு செய்யும் என்றும், 2-வது பீல்டிங் செய்யும் அணி அதே பந்தை தேர்வு செய்யலாம் அல்லது பந்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், போட்டிக்கான நடைபெறும் காலநிலையை கருதி முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் :

மேலும் போட்டியின் கடைசி ஓவரில் பீல்டர்கள் கட்டுப்பாடு எப்படி இருந்தார்களோ அதே போன்று தான் சூப்பர் ஓவரிலும் நிற்க வேண்டும் எனவும், சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள் எனவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டி-20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு -அணியின் ஆலோசகராக தோனி..!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

naveen santhakumar

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா அடுத்த சுற்றுக்கு தகுதி….போபண்ணா ஜோடி ஏமாற்றம் :

Shobika