விளையாட்டு

வரலாற்று சிறப்புகளை பெறும் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வரலாற்று சிறப்புகளை பெறும் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி

இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு ஆட்டம் என்பதால் இந்த போட்டிக்கு இந்தியா முழுவதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற இந்திய அணி இந்தப் போட்டியிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி மிகவும் வலுவாக உள்ளது.அதே சமயம் இவர்களிடம் வங்கதேசம் தாக்குப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை மட்டும் பகல்-இரவு ஆட்டங்கள் ஆக கண்ட ரசிகர்கள் முதன்முதலாக டெஸ்ட் போட்டியை காணும் வாய்ப்பை பெறுகின்றனர். ஏற்கனவே 2015இல் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்தது. இதுவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,இங்கிலாந்து,இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா !
பிங்க் பால்

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான பல நட்சத்திரங்கள் மைதானத்திற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்றைய போட்டியை காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்,அனில் கும்ப்ளே ஆகியோரும், இந்தியா-வங்கதேச அணிகளின் முன்னாள் கேப்டன்கள், பிவி சிந்து, சானியா மிர்சா, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் மைதானத்திற்கு வருகிறார்கள். இந்த போட்டிக்கு முன்னதாக வங்கதேச பாடகி ரூனா லைலா, இசைக் கலைஞர் ஜீத் கங்குலி ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ALSO READ  3வது போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தை டாஸ் போடுவதற்கு முன்னர் பாராசூட் வீரர்கள் மூலம் இரு அணிகளிடமும் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த போட்டியின்போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

Admin

யூரோ கால்பந்து போட்டி…இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி…

Shobika

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்ய தயாராகும் நியூசிலாந்து அணி

Admin