தமிழகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் உங்கள் பகுதிக்குரிய வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் இந்த முகாமில் பங்கு பெறலாம்.

ALSO READ  தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இணையதளம் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் இதர விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.இதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

naveen santhakumar

கனமழை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

naveen santhakumar

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

News Editor