தமிழகம்

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னை மக்களின் கோரிக்கைகளை ஏற்று  மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலவர் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயிலில் 2 கிலோ மீட்டர் வரையிலான பயணத் தொலைவுக்கு கட்டணம் மாற்றமின்றி 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டில் இருந்து 5 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு 20 ரூபாயும், 5 முதல் 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 12 முதல் 21 கிலோ மீட்டர் வரை செல்ல 40 ரூபாயும், 21ல் இருந்து 32 கிலோ மீட்டர் வரை பயணிப்போருக்கு 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !


மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை வரும் திங்கட்கிழமை அன்று அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு

News Editor

முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

News Editor

தீபாவளிப் பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப் படுகிறதா?????

naveen santhakumar