தமிழகம்

கொரோனாவா இருந்தாலும் சரி…சொரோனாவா இருந்தாலும் சரி…எங்களுக்கு ஆஃபர் தான் முக்கியம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் தேவர்சிலை பகுதியில் செல்போன் கடைகள் அதிகளவு உள்ளது. இப்பகுதியில் சிறிய அளவிலான செல்போன் கடைகள் முதல், பெரிய நிறுவனங்களின் அலைபேசி கடையும் உள்ளது.

இந்த பகுதியில் செயல்பட்டு வந்த அலங்கார் என்ற செல்போன் கடை உரிமையாளர், கடந்த 21 ஆம் தேதி புதிதாக ஆறாவது கிளையை இப்பகுதியில் திறந்துள்ளார். கடைதிறப்பை முன்னிட்டு மக்களுக்கு சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சலுகையாக ரூ.6 க்கு ஹெட்செட் மற்றும் ரூ.6 க்கு டெம்பர் கிளாஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் என்றும், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் செல்போன் நம்பரை பதிவு செய்தால், நாளொன்றுக்கு 100 பயனாளிகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ALSO READ  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

இதனை அறிந்த மக்கள் கடை திறப்பதற்கு முன்னதாக கூட்டமாக திரண்டிருந்தனர். கடை திறப்பிற்கு பின்னரும் மக்கள் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், கடைக்கு சீல் வைத்து மக்களை சம்பவ இடத்திலிருந்து விரட்டி அடித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குமரியில் சூறைக்காற்று; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

News Editor

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது?

Shanthi

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor