தமிழகம்

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவலை பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை எந்த மருத்துவமனையும் அனுமதிக்கவில்லை என்றும் படுக்கை வசதி இல்லை என்ற காரணத்தைக் கூறி அவரை அனுமதிக்க மறுத்ததாகவும், மருத்துவமனை நிர்வாகிகள், எம்டி வரை தான் முயற்சித்தும் எந்த உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் இதனை அடுத்து அந்த நண்பர் பரிதாபமாக கொரோனாவுக்கு பலியானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ALSO READ  முன்னாள் அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்நாள் அமைச்சர் !

இதுகுறித்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்:-

படுக்கைகள் நிரம்பிவிட்டதாக செய்திவாசிப்பாளர் வரதராஜன் வதந்தி பரப்பும் வகையில் செயல்பட்டுள்ளார். வரதராஜன் மீது பெருந்தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவும் இந்த காலத்தில் பொறுப்பு இல்லாத வகையில் செய்திவாசிப்பாளர் வரதராஜன் செயல்பட்டுள்ளார். அவர் எந்த அரசு செயலாளரை தொடர்பு கொண்டார், எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று செய்திவாசிப்பாளர் வரதராஜன் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6 பேர் மட்டும் வெண்டிலேட்டர் வசதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளில் நிலையை பொறுத்துதான் வெண்டிலெட்டர்களை பயன்படுத்தமுடியும்.

ALSO READ  2வது இடத்தில் தமிழகம், முதலிடத்தில் கேரளம்… உ.பி.க்கு பரிதாப நிலை!

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக செய்திவாசிப்பாளர் வரதராஜன் வீடியோ வெளியிட்டார். படுக்கைகள் நிரம்பவில்லை என்பதை நிரூபிக்க செய்திவாசிப்பாளர் வரதராஜன் என்னுடன் நேரடியாக வரத் தயாரா? பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றச்சாட்டுகளை சொல்லும் முன் யோசிக்க வேண்டும் என்றார்.

மேலும், கூறிய அமைச்சர் சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில், தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி கூறி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

News Editor

யூ-டியூப் பார்த்து பிரசவம்… குழந்தை, தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!

naveen santhakumar

பிளஸ் 2 மறு கூட்டல், நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அரசுத் தேர்வுகள் இயக்ககம்…. 

naveen santhakumar