தமிழகம்

எனது முடிவு விரைவில் அறிவிக்கப்படும்-நடிகர் ரஜினிகாந்த்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை : 

அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, “என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று பலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை” என்றார்.

மேலும், ‛தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா????? தனித்து போட்டியிடலாமா???? அல்லது கூட்டணியுடனா???? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்???? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்???? கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி???? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  169-வது படத்தில் நடிக்க தயாராகிறார் நடிகர் ரஜினிகாந்த் :

மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. 

அவர்கள் கருத்தை என்னிடம் கூறினார். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்” என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ப்ளஸ் 2 தேர்வு எப்போது; பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !   

News Editor

ஸ்டாலினுக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகள்- மாநில அரசு

Admin

சரவணா ஸ்டோர்சில் ரூ.1,000 கோடி வருவாய் மறைப்பு அம்பலம்!

naveen santhakumar