தமிழகம்

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் மாநில அளவிலான துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அனைவரும் பெறும் வகையில் பணியாற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும், தற்போது கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் பணிகளை விரைவுபடுத்துமாறும் அலுவலர்களுக்கு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தினார்.

ALSO READ  பள்ளிகளில் பாலியல் தொல்லை : அச்சமின்றி புகார் தெரிவிக்க புகார் பெட்டி
Adi Dravidar and Tribal welfare scheme by Tamil Nadu government - The  Indian Iris

தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அடுத்த ஆய்வின்போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தாட்கோ சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்க நான்கு மண்டல அலைபேசி எண்களைத் தொடர்புக்கொள்ளலாம். மண்டல கட்டுப்பாட்டு அறைகள் எண்கள்: சென்னை – 7448828476, கோவை – 9445029498, திருச்சி – 7448828501, மதுரை – 9445029542.

ALSO READ  தேவர் ஜெயந்தி - தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை - ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?
Hygiene With Chhota Bheem

இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், இ.ஆ.ப., ஆணையர் எஸ்.மதுமதி,இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., இணை இயக்குநர்சு.பழனிசாமி,இ.ஆ.ப.,
சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.விஜயா ராணி,இ.ஆ.ப., பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ராகுல்,இ.வ.ப., தாட்கோ பொது மேலாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது…!

News Editor

இன்னும் சற்று நேரத்தில் அதிரடி அறிவிப்பு… முதல்வர் தீவிர ஆலோசனை!

naveen santhakumar

முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை.. 

naveen santhakumar