தமிழகம்

மக்களிடம் தானமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயயை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த மனிதர் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

மதுரையில் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதிக்கு யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன், ஒவ்வொரு இடமாக சென்று யாசகம் பெற்று, அந்த பணத்தை பொது சேவைக்கு கொடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரையில் இருந்த அவர், அங்கே பல பகுதிகளில் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாயை கொரோனா நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இதற்கு முன்னர் இவர் தான் யாசகமாய் பெற்ற பணத்தில் இருந்து ஏழை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இனி இவர்களுக்கு வீடு தேடி உணவு வரும்… தமிழக அரசு அதிரடி!

ஒரு சிலர் எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பேரிடர் காலத்திலும், பிறருக்கு துன்பம் ஏற்படும் நேரத்திலும் உதவ மனம் வருவதில்லை. ஆனால் எந்த வசதியும் இல்லாமல் தான் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிலிருந்து சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ள இவர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

ALSO READ  அரசு பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் சகாயம் IAS :


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

Admin

பொண்ணு கிடைக்கல… 34 வயது இளைஞரின் அதிரடி முடிவு

Admin