தமிழகம்

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Final semester exams for engineering students in July: Anna University- The  New Indian Express

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைனில் நடந்து வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tamil Nadu engineering semester exams to commence from May 25 - Times of  India

அதேபோல், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் மாதம் 13-ம் தேதி துவங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

ALSO READ  தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

ஆனால் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Anna University To Conduct End-Semester Exams In Open Book Format

டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்பதோடு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் அல்லாமல், நேரடியாக நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3 மாத குழந்தையை பிறப்புறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ பாட்டி – அதிர்ச்சி சம்பவம்!

naveen santhakumar

நந்தா கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை:

naveen santhakumar

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

naveen santhakumar