தமிழகம்

ஆகஸ்ட் 25 அன்று விவசாயிகளைச் சந்திக்க பா ஜா க முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டை தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.

உழவருடன் ஒரு நாள் எனும் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளை சந்திக்கின்றனர். அப்போது ஒன்றிய அரசின் விவசாய திட்டங்கள், வேளாண் சட்டங்கள் தொடர்பான முழு விபரங்களை விவசாயிகளிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ALSO READ  வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு- 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களும், சலுகைகளும், சுதந்திர இந்தியாவில், இதுவரை யாரும் செய்ததில்லை. பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

New TN BJP president K. Annamalai to take charge on Friday

எனவே தமிழக பா.ஜ.,வினர் வரும் 25ம் தேதி தமிழ் நாடு விவசாயிகளை ஒருநாள் முழுதும் செலவிட திட்டமிட்டுள்ளனர். அந்த நாளை, ‘உழவருடன் ஒரு நாள்’ என்று அழைக்கிறோம். இந்நாளில் விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன என தெரிந்து அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது

News Editor

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்வு

naveen santhakumar