தமிழகம்

பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய மனு தள்ளுபடி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் பட்டியல் இனமக்களுக்காக வாக்களிக்க தனி வாக்ககுச்சவாடி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அதில் பட்டியலின மக்கள் வாக்களிக்க சென்ற போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் மீது மீது தாக்குதல் நடத்தினார்கள். அதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தனி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதே போல் சட்டமன்றத் தேர்தலுக்கும் தனி வாக்குச் சாவடியை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு  விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.


Share
ALSO READ  ரஜினியை "தலைவா" என்று அழைத்து மோடி ட்வீட் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுக் கடைகள் திறப்பு: மது வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்.. 

naveen santhakumar

சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிக்க தடை!

Shanthi

“Made in Tamil Nadu” என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது ஆசை மட்டுமல்ல, இலட்சியமும் கூட -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Admin