தமிழகம்

இவர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ்… தமிழ்நாடு அரசு அசத்தல்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,அறநிலைய துறையில் ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து, 14 விழுக்காடு உயர்வு செய்து, 31 விழுக்காடாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2.500/- காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200/-, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.1,400/- மாதச் சம்பளம் உயரும். இதன் மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000/ வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.2,000/- ஆக ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்படுகிறது. இதனால், இவ்வாண்டு ரூ. 1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேலூரில் மீண்டும், மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

naveen santhakumar

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

Admin

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகன்!….

naveen santhakumar