தமிழகம்

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:

ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை எற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளிவந்தது.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்தனர் .

What Happened In The Coimbatore Student Suicide Case? Teacher MIthun  Chakravarthy Case | ஆசிரியரால் பாலியல் தொல்லை..மறைக்கும் பள்ளி.. கடிதத்தில்  3 பெயர்கள் - கோவை மாணவி தற்கொலை ...

இந்நிலையில் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. தகவலறிந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானார். தலைமறைவான பள்ளி முதல்வரை பிடிக்க துணை ஆணையர் ஜெயசந்திரன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கபட்டது.

ALSO READ  ஒட்டக பால் டீ போடு மேன் - சேலத்தில் ஒட்டக பாலில் டீ, காபி அசத்தும் இளைஞர்கள்

இந்நிலையில் இன்று பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

கோவை மாணவி தற்கொலை வழக்கு.. பெங்களூருவில் பதுங்கியிருந்த பள்ளி முதல்வர்  மீரா கைது | Coimbatore girl student suicide: Principal Meera arrested -  Tamil Oneindia

புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திகைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தத்த்தக்கது.

ALSO READ  இந்து சமய அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை
Muslim woman with stop harassment and abuse no sexual violence 3170319  Vector Art at Vecteezy

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளிநாடுகள் தடுப்பூசி கொடுக்க முன்வந்தால் வரவேற்க வேண்டும்; விஜய் வசந்த் !

News Editor

இயல்பை விட அதிக மழை – சென்னையில் 77%; தமிழகத்தில் 54% அதிகம்!

naveen santhakumar

“எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்” ஜோதிமணி எம்.பி கருத்து !

News Editor