தமிழகம்

ஒட்டக பால் டீ போடு மேன் – சேலத்தில் ஒட்டக பாலில் டீ, காபி அசத்தும் இளைஞர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி நடித்த வெற்றிக்கொடி கட்டு படத்தில் ஒட்டக பாலில் டீ போட சொல்லும் வடிவேலு காமெடி பிரபலம். ஒட்டக பால் டீ வேணுமா?? அதுக்கு நீங்க துபாய்க்கோ, சவூதிக்கோ இல்லை ராஜஸ்தானுக்கோ போகவேண்டியதில்லை. நம்ம சேலத்திலேயே ஒட்டகப்பால் விற்பனை சக்கை போடு போடுகிறது.

ஒட்டகப்பால்ல டீ போடு என்று வடிவேலு தைரியமாக கடைகளில் கேட்கலாம் - விலை  கொஞ்சம் அதிகம்தான் | Amul's Camel milk 500ml pack MRP Rs 50 - Tamil  Goodreturns

ஆம், சேலத்தில் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அருண் (35) பிரபாகரன் (33) நிஜமாகவே ஒட்டக பாலில் டீ, காபி வழங்கி அசத்தி வருகின்றனர் . கோரிமேடு, என்.ஜி.ஓ.,காலனி பகுதியில் உள்ள ‘சைலம்’ உணவகத்தில்,ஒட்டகபால் டீ, காபியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

ALSO READ  "மோடி ஜிந்தாபாத்"; "ஜெய் ஸ்ரீராம்" கூற மறுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு அடி உதை… 
 ஒட்டக பாலில் டீ, காபி அசத்தும் இளைஞர்கள்

டீ 60 ரூபாய், காபி 65 ரூபாய், மில்க் ஷேக் 140 ரூபாய், சாக்லேட் 75 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒட்டகப் பால் லிட்டர், 899 ரூபாய்க்கும், அரை லிட்டர், 450 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். மேலும், ஒட்டக பாலில் மில்க் ஷேக், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து வருகிறோம்.

ஒட்டகப் பாலில் அதிக சத்துக்கள், எளிதில் ஜீரணமாகும் தன்மை உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வாங்க துவங்கினோம். கொரோனா தளர்வுக்கு பின், ராஜஸ்தானில் உள்ள ஒரு பண்ணையில் கறந்த ஒட்டக பாலை உடனடியாக குளிரூட்டி, 48 மணி நேரத்தில் சேலம் வந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.

ALSO READ  பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம்

அதுமட்டுமல்லாமல் மாட்டுப் பாலை விட, கெட்டித்தன்மை கொண்டதாகவும், சிறிது உப்பு சுவை கூடுதலாகவும் இருக்கும். மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. மேலும், குழந்தைகளும் விரும்பி குடிப்பதால் விற்பனை அதிகரித்து வருகிறது அவர்கள் கூறினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!

Admin

எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கரகாட்ட கலைஞர்கள் கண்ணீர் ! 

News Editor

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

News Editor