தமிழகம்

பிசாசுத் தனமான அசுர அடி… ஆரோக்கியம் போச்சுன்னா… வாழ்க்கையே போச்சு – ரஜினிகாந்த் அட்வைஸ்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது என்கிற அபாயகரமான நிலைக்கு நடுவே, தமிழ்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

ALSO READ  திருமணத்திற்கு புதிய விதிமுறை; இ-பதிவு விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு !

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

ALSO READ  சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் வெளியீடு!

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துஅவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தைஅணியாமலும் இருக்காதீர்கள் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயம் !

News Editor

பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற காரணம் என்ன?

Admin

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

News Editor