தமிழகம்

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி :

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கும்.

மதியம் சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகிய பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி. அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய புறப்படுவார்.

வழக்கமாக கோவில் கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கோவில் கிரிப்பிரகார கடற்கரை நுழைவுவாயில் அருகில் பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

ALSO READ  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !   

7-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய விழா நாட்களான 6, 7-ம் திருநாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்புகள் மற்றும் தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காவல் துறை தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வேண்டும் – டிடிவி தினகரன்..!

News Editor

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்…!

naveen santhakumar

இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

News Editor