தமிழகம்

தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23 ஆம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழ் நாட்டில் கொரானா தொற்று பரவும் தன்மை அண்டை மாநிலங்களில் இவற்றின் தாக்கம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் செயலாக்கம் குறித்து இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் வருகின்ற 23ம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TN to close beaches, Vandalur zoo, Mamallapuram during Pongal - The Federal

மேலும் பின்கண்டவாறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மாநில கவர்னர்கள் பொதுமக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை

1) தமிழ் நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி

2) செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு உத்தரவு

3) தகவல் தொழில்நுட்பம், சேவை நிறுவனங்கள் 100% சதவீத பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Silence and distancing new normal as Chennai's movie theatres reopen- The  New Indian Express

4) ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி

5) தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி

6) வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி

ALSO READ  e-Pass பெறுவதற்கான புதிய நடைமுறை...

7) இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

Marina Swimming Pool, Triplicane - Swimming Pools in Chennai - Justdial

8) தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி

9) தமிழகம் முழுவதும் நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

10) ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

எனவே பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட தளர்வுகளை கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்சஒழிப்பு துறை சோதனை…!

naveen santhakumar

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்?

Shanthi

ஸ்டெர்லைட் விசாரணைக்கு ஆஜராக பயந்தாரா ரஜினி…?

Admin