தமிழகம்

சென்னையில் போக்குவரத்துக்கு தடை – காவல்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மீண்டும் மழை வெள்ளம் காரணமாக மிதக்கும் காரணத்தால் சுரங்கப்பாதைகளில் நீர் நிரம்பியுள்ளதால், பல்வேறு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி.

மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில்‌ வாகன போக்குவரத்தின்‌ தற்போதைய நிலவரம்‌.

சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு தடை ! - newscrowns
  1. ரங்கராஜபுரம்‌ இரண்டு சக்கர வாகண சுரங்கப்பாதை – போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
  2. மேட்லி சுரங்கப்பாதை மழைநீர்‌ தேங்கி உள்ளதால்‌- போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
  3. கே.கே.நகர்‌ ராஜமண்ணார்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.
  4. வளசரவாக்கம்‌ மெகா மாட்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்த்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.
  5. வாணி மஹால்‌ முதல்‌ பென்ஸ்‌ பார்க்‌ வரை தண்ணிர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும்‌ ராகவைய்யா சாலை வழியாக திரும்பி விடப்பட்டுள்ளது.
  6. மேடவாக்கம்‌ முதல்‌ சோழிங்கநல்லூர்‌ வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. இதற்கு மாற்றாக காமாட்சி மருத்துவமனை வழியாக ‘சோழிங்நல்லூர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.
  7. தாம்பரம்‌ இரண்டு சக்கரம்‌ மற்றும்‌ இலகுரக வாகன சுரங்கப்பாதை – போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
  8. அதேபோல், கணேஷபுரம்‌ சுரங்கப்பாதை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
  9. சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணி அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொள்வதன் காரணமாக உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும்‌ போக்குவரத்து எதிர்‌ திசையில்‌ அணுமதிக்கப்படுகிறது.
  10. இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணனா பிரதான சாலை நோக்கி செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

Share
ALSO READ  தஞ்சை மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்

naveen santhakumar

தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

News Editor

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்; தமிழக அரசு !

News Editor