உலகம்

ஜப்பானின் அடுத்த பிரதமரானார் ஃபுமியோ கிஷிடா…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Fumio Kishida wins race to become Japan's next prime minister - BBC News

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனையடுத்து யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.

Japan after Abe: Suga aims to consolidate power | Financial Times

இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து யோஷிஹிதே சுகா, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.

ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

ALSO READ  குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்

இதில், சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் கோனோ என்பவரும், புமியோ கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார். கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

ALSO READ  ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

புமியோ கிஷிடா ஏற்கனவே 2012 – 2017இல் ஜப்பானின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“சிங்கிள்” தான் கெத்து – தென்கொரிய பெண்களின் அதிரடி முடிவு

Admin

அக்டோபர்-13 வானில் நிகழும் அதிசயம்…..மிஸ் பண்ணிடாதீங்க….அப்புறம் வருத்தப்படுவீங்க…..

naveen santhakumar

பிலிப்பைன்ஸை வாட்டி எடுத்த “வாம்கோ”:

naveen santhakumar