தமிழகம்

எஸ்.பி.பி-க்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா???? அதிரவைக்கும் அக்குபஞ்சர் மருத்துவரின் தகவல்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தவறான சிகிச்சையால் தான் அதிகப்படியான மரணங்கள் அலோபதி சிகிச்சையின் போது ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணமும் அவ்வாறுதான் ஏற்பட்டிருப்பதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் அதிரவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த எம்.என்.சங்கர் மருத்துவ உலகத்தின் கொடூரமான முகத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு எஸ்.பி.பி மரணம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறுகையில்

# “சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணி நேரம் ஏசியில் இருந்தால் கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, இதய பிரச்சனை, மூச்சிரைப்பு போன்றவை அதிகரிக்கும்.அதுவே உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டவர்கள் என்றால் நோயின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும்.

#பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் கெடாமலிருக்க ஏசி எந்த அளவுக்கு வைக்கின்றனரோ அதே அளவு ஏசி ICU வார்டிலும் வைக்கப்படுகிறது.

#காரணம் நோயாளிகளின் நலன் கருதி இல்லை அதில் இருக்கும் கருவிகள் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்பதற்காக அவ்வளவு ஏசி வைக்கிறார்கள்.

ALSO READ  6 பேர் பலி 16 பேர் காயம்- நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பாய்லர் வெடித்து விபத்து…

மேலும் பேசிய அவர் “பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்ட மருத்துவர்கள் ஏசி மூலமாக கொரோனா அதிகரிக்கும் என்று கூறியதால் தான் நாடு முழுவதும் விமானம், தியேட்டர் போன்றவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அவ்வாறு இருக்கையில் ICUவில் ஏசி பொருத்தப்பட்டு இருந்தால் லேசான பாதிப்புடன் செல்பவர்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். தொண்டையில் சளி இருப்பதாக எஸ்.பி.பி சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனார்.

அவருக்கு ஸ்டீம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. சூரிய வெளிச்சத்தை அவருக்கு காட்டவே இல்லை. முழு நேரமும் ஏசி அறையிலேயே வைத்து நன்றாக போர்த்தி விட்டு இருந்தனர். இதனால் நோயின் தாக்கம் அவருக்கு அதிகமாகிவிட்டது. இதில் உணவு நேரடியாக செல்வதற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து இருந்தனர்.

ALSO READ  சென்னையில் போக்குவரத்துக்கு தடை - காவல்துறை அறிவிப்பு!

அந்த அறுவை சிகிச்சை தேவையற்றது. ஆனாலும் அவர்கள் அதனை செய்ததற்கான காரணம் என்ன???? அது அவர்களது தவறினால் நடந்த ஒன்று. எஸ்.பி.பி அவர்களுக்கு தொண்டையில் ஹாஸ்டிமா செய்ததால் அவர் உயிர் பிழைத்து இருந்தாலும் அவரால் பாட முடிந்திருக்காது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க மட்டுமே முடியும். அது எஸ்பிபி அவர்களுக்கு எவ்வளவு பெரிய சோதனை” என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு ! 

News Editor

குழந்தை பிறப்பில் சந்தேகம்… 11 மாத குழந்தை கொலை

Admin

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா – புது ரூட்டில் ஜெயிலுக்குள் கஞ்சா சப்ளை!

naveen santhakumar