தமிழகம்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழு நியமித்து ஆலோசனை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு CBSE மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது.இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்துக்காக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தன.

தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டிருந்த நிலையில், 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பான நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.அதன்படி கல்வித்துறை உயர் அதிகாரிகள், நிபுணர் குழுவினர், மனநல மருத்துவர்கள் ஆகியோருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்கள். இதைதொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ALSO READ  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்.

பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் இதுதொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும். மற்ற மாநிலங்களில் பிளஸ்-2 மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்.

மத்திய கல்வி வாரியமான CBSE 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் மாணவர்களின் முந்தைய தகுதி நிலவரங்களும் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்பதும் ஆய்வு செய்யப்படும்.

ALSO READ  அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதும் அவை தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். அந்த அறிக்கையை முதல்- அமைச்சரிடம் ஆசிரியர் குழுவினர் சமர்ப்பிப்பார்கள். அதன் பிறகு +2 மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்கப்படுகிறது என்ற முழு விவரமும் தெரியவரும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை முடிவு செய்யும் போது அவர்கள் 11-ம் வகுப்பில் எந்த அளவுக்கு மதிப்பெண்களை எடுத்து இருந்தனர் என்பதையும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவர்கள் எப்படி தகுதி பெற்று இருந்தனர் என்பதும் ஆய்வு செய்யப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நல்லாசிரியர் யார்? நல்லாசிரியர் விருது வழங்கும் விதிகளில் மாற்றம்

naveen santhakumar

ஆன்லைன் வாயிலாக நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்பாடு செய்துள்ளது…!!

Admin

செய்யூர் திமுக எம்எல்ஏவிற்கு கொரோனா- மருத்துவமனையில் அனுமதி…

naveen santhakumar