தமிழகம்

நல்லாசிரியர் யார்? நல்லாசிரியர் விருது வழங்கும் விதிகளில் மாற்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் திருத்தம் செய்துள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப். 5ம் தேதி தேசிய அளவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பணியில் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

Essay on Sarvepalli Radhakrishnan for Students | 500+ Words Essay

இந்த விருதுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தனித்தனியாக விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த ஆண்டுக்கான மத்திய அரசு விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடந்து வருகிறது.

ALSO READ  சினிமா பாணியில் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை கடத்திய மர்ம கும்பல்:

மாநில அளவிலான விருதுக்கு, விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் திருத்தம் செய்துஉள்ளனர்.

இதன்படி, விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களின் தகுதியில், கொரோனா கால சேவையும் கட்டாயமாகி உள்ளது.

ALSO READ  வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்தாண்டு கொரோனா தொற்று பரவிய முதல் அலையின்போதும், அதன் பிறகும், அரசு உத்தரவுப்படி தவறாமல் பணிக்கு வந்தவர்கள், கொரோனா தன்னார்வ பணிகளில் ஈடுபட்டவர்கள்,

கொரோனா காலத்தில் கல்வி ‘டிவி’ மற்றும் ஆன்லைன் மூலம், பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே விருதை பெற முடியும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அக்.4 முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்..!

Admin

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ .ஏ .எஸ் அதிகாரி எழுதிய நூல் சோனியா காந்திக்கு பரிசளிப்பு

News Editor

அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கிய ஜெயலலிதா புகைப்படம்..

News Editor